Banner-2020_21Banner-2020_21
WCSC-President

Pavoorchatram Thavamaiyam Opening Ceremony

உன்னுள் பார்

ஓ மானிடா சொன்னா புரியாது பாரு – இந்த

மனவளக்கலை மன்றம் வந்து பாரு,

நீ தனித்திருக்க முயற்சித்துப்பாரு,

உன் மனம் அமைதியில் திளைக்கும் பாரு,

அறிவுத்திருக்கோயிலில் ஆயிரம்பேர் கூடுவாங்க,

அறியாமை இருள் நீங்கி வீடு திரும்புவாங்க,

குற்றாலம் மனவளக்கலை என்றொரு பேரு,

அது இயங்கும் அருண் இல்லம் நீ வந்து பாரு,

சுயநலமற்ற தலைவரின் தொண்டு பாரு,

அவருக்குத் தோள் கொடுக்கும் மனையாளைப் பாரு,

காலநேரம் பாராது தொண்டு புரிவாங்க,

அண்ணாமலையார் பாக்கியவதி தம்பதி தாங்க,

ஐம்புலன் அடக்கி நீ அமர்ந்து பாரு,

உன்னையே நீ உற்றுப் பாரு,

உள்ளிருக்கும் கடவுளை நீ தொட்டுப்பாரு,

அவன் நீ வேறல்ல உணர்வாய் பாரு,

பெற்ற தாயும் உன் பிறப்பும் மறந்தாலும்

கட்டிய துணையும் கன்றும் எனை மறந்தாலும்

உற்ற தேகத்தை உறவு கொண்ட உயிர் மறந்தாலும்

நற்றவம் புரிந்து எனக்கருளும் குருவே உமை மறவேன்.

1st Brahmma Gnanam Students